கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு புதிதாக நியமனம் பெற்ற மருத்துவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் அறிமுக நிகழ்வு அப்பணிமனையில் அண்மையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியக் கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இங்கு உரையாற்றிய பிராந்திய பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன், கல்முனையிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய சுகாதார நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகள் குறித்து விரிவாக விளக்கினார்.



