புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள SLIC லைஃப் மற்றும் SLIC ஜெனரல் – 112 பயிற்சி காப்புறுதி உதவியாளர்களுக்கு நியமனம்

1 Min Read

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் கோப்பரேஷன் லைஃப் லிமிடெட் (SLICLL) மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஜெனரல் லிமிடெட் (SLICGL) ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 112 பயிற்சி காப்புறுதி உதவியாளர்களை நியமித்திருப்பதுடன், அண்மைக் காலத்தில் இரண்டு நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆட்சேர்ப்பாக அமைந்துள்ளது.

இந்த மொத்த ஆட்சேர்ப்பில் 87 பேர் SLICGL நிறுவனத்திற்கும், 25 பேர் SLICLL நிறுவனத்திற்கும் நியமிக்கப்பட்டனர். இந்த ஆட்சேர்ப்பானது வேலைவாய்ப்புக்களுக்குப் பங்களிக்கும் அதேநேரம் இரு நிறுவனங்களும் தமது பணியாட் படையை வலுப்படுத்தும் தொடர்சியான முயற்சியை எடுத்துக்காட்டுகிறது.

வெளிப்படைத் தன்மை மற்றும் தகுதி அடிப்படையிலான தெரிவை உறுதிப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்ட மற்றும் சுயாதீனமான மதிப்பாய்வுக் கட்டமைப்பின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் தகுதி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன், விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துப் பரீட்சையும் நடத்தப்பட்டது. தேவையான அளவுகோல்களைப் பூர்த்திசெய்தவர்கள் சுயாதீனக் குழுவினால் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்றதுடன், இந்தச் செயன்முறை முழுவதும் நேர்மையையும் நம்பகத் தன்மையையும் வலுப்படுத்தியது.

புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சி காப்புறுதி உதவியாளர்கள் பன்முகத்தன்மை மற்றும் திறமை நிறைந்தவர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஏறத்தாழ நியமிக்கப்பட்டவர்களில் 30 வீதமானவர்கள் பட்டதாரிகள் என்பதுடன், அனைத்து விண்ணப்பதாரர்களும் க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரச் சான்றிதழ் அல்லது அதற்கு சமமான டிப்ளோமா மற்றும் உயர் கல்வித் தகுதியைப் பெற்றுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட பயிற்சி காப்புறுதி உதவியாளர்கள்

மனித மூலதனத்தை மேம்படுத்துவது மற்றும் காப்புறுதித் துறையில் எதிர்காலத்திற்குத் தயாரான துறைசார் நிபுணர்களை உருவாக்குவது என்ற SLICLL மற்றும் SLICGL நிறுவனங்களின் நீண்டகால நோக்கத்திற்கு இணங்கும் வகையில் ஆட்சேர்ப்பு அமைந்துள்ளது.

புதிதாகப் பணியில் இணைபவர்களுக்கு முறையான தொழில் வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டிருப்பதுடன், இது அவர்கள் நிறுவனங்களுக்குள் நிலையான தொழில் வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள உதவும். செயற்பாட்டின் தேவை, வினைத்திறன் மற்றும் பணியாளர்களின் சௌகரியம் என்பவற்றை நிறைவேற்றும் வகையில் பணியாளர்கள் தாம் வசிக்கும் பகுதிகளுக்கு அருகிலேயே அவர்களுக்கான பணியிடங்களை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *