இலங்கையில் மிகச் சிறந்த கல்வியாளர்களுக்கு கௌரவிப்பு

1 Min Read

2025 நவம்பர் 26 அன்று கோட்டை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மொனார்க் இம்பீரியல் நிகழ்வு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கல்வியாளர் விருதுகள் 2025 நிகழ்வில் இலங்கையில் உயர் கல்வி மற்றும் பொதுக் கல்வித் துறைகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ள கல்வியாளர்களை கௌரவிக்கும் வகையில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்கால தலைமுறைகளுக்கான கல்வித் தராதரங்களை மேம்படுத்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் நியமனங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அளவுகோல்களைப் பயன்படுத்தி, கற்பிக்கும் செயல்திறன், அறிவார்ந்த உழைப்பு, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஆற்றியுள்ள பங்களிப்புக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உயர் கல்வித்துறையிலுள்ள கல்வியாளர்களை மதிப்பீடு செய்து, இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயோக விஞ்ஞானங்கள், தாதியம் மற்றும் சுகாதார விஞ்ஞானங்கள், சமூக விஞ்ஞானங்கள், கணிதம் மற்றும் புள்ளி விபரவியல், உளவியல், பொறியியல், மொழி மற்றும் இலக்கியம், கல்வி, கணினி, சட்டம், வணிகம் மற்றும் முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறுபட்ட துறைகளின் கீழ் 2025ம் ஆண்டுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *