பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னைத் தடுத்து வைத்துள்ளமை சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.




