மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள்

1 Min Read

இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (05) காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும்  இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம் பெற்றன.

ஆலய வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த ஆராதனை வழிபாடுகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *