லண்டனில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

1 Min Read

லண்டன் பார்னெட் பகுதியில் நடந்த பயங்கரமான தீ விபத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

லண்டனில் தீ விபத்து

வடக்கு லண்டன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது.

ஆல்பேமார்ல் சாலையில் அமைந்துள்ள பாதிக்கப்பட்ட இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.

லண்டனில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு | House Fire In London 2 Dead In Barnet

இருப்பினும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது வீட்டின் தரைத்தளம் முழுவதும் தீ பரவி இருந்தது.

மேலும் வீட்டுத் தீ விபத்தில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 3.14 மணியளவில் தீயானது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *