80 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல்: ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவல்

0 Min Read

320,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை இலங்கை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹப்புத்தளை ஹல்துமுல்ல பகுதியில் பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த சோதனை நடத்தியது.

அலுத்வெல காப்புக் காடு மற்றும் உனகந்த காப்புக் காடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் ஆறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 320,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மதிப்புள்ளவை என பொலிஸார் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *