விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானம் – 29 பேர் உயிரிழப்பு

1 Min Read

ரஷ்ய ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய விமான விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவிற்கு சொந்தமான Antonov-26 என்ற ராணுவ போக்குவரத்து விமானம், 6 விமான ஊழியர்கள் மற்றும் 23 பயணிகளுடன் கிரிமியா தீவுக்கு மேலே பறந்து கொண்டிருந்தது.

விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானம் - 29 பேர் உயிரிழப்பு | 29 Dies In Russia Military Plane Crash In Crimea

ரஷ்யா நேரப்படி மார்ச் 31 ஆம் திகதி மாலை 6 மணியளவில் விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேடல் மற்றும் மீட்பு குழுவினர் விமானம் விபத்திற்குள்ளான இடத்தை கண்டறிந்தனர். விமானத்தில் பயணித்த 6 விமான ஊழியர்கள் மற்றும் 23 பயணிகளும் உயிரிழந்து விட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்திற்குள்ளான விமானத்தில் வெளிப்புறம் தாக்கம் இல்லை எனவும், இதனால் தொழில்நுட்ப காரணங்களால் விபத்து நேர்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *