ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்

1 Min Read

ஜனநாயகன் படம் தொடர்பான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜனநாயகம் தணிக்கை விவகாரம்

விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தை வரும் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம் | Supreme Court Dismissed Jananayagan Censor Case

ஆனால், மறுதணிக்கை செய்ய உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்ததோடு, வழக்கை ஜனவரி 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம் | Supreme Court Dismissed Jananayagan Censor Case

இதனையடுத்து, வழக்கை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தங்கள் தரப்பை வாதத்தை கேட்காமல் தீர்ப்பு வழங்கக்கூடாது என தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு தள்ளுபடி

மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. ஜனநாயகன் விவகாரத்தில் தலையிட விருப்பம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளனர்.

ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல் - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம் | Supreme Court Dismissed Jananayagan Censor Case

மேலும், ஜனவரி 20ஆம் திகதி வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய்யின் கடைசி படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது விஜய் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *