ஈழத்தில் புகழ்பூத்த சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மகா கும்பாபிசேகப் பெருவிழா கடந்த 01ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றது.
காலை 9.30 மணிக்கும் 11.46 மணிக்கும் இடைப்பட்ட சுபவேளையில் கும்பாபிசேகம் நிகழ்தேறியது.
சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிசேக பெருவிழாவில்,50 மேற்பட்ட அந்தணக் குருமார்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
மேலும், தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிசேகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





