சிலிண்டர் கொடுத்தால் தினமும் இலவச பிரியாணி – உணவகத்தின் சலுகை

1 Min Read

சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, சிலிண்டர் கொடுத்தால் இலவச பிரியாணி வழங்குவதாக உணவகம் அறிவித்துள்ளது.

சிலிண்டர் கொடுத்தால் இலவச பிரியாணி

மத்திய கிழக்கு போர் காரணமாக ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் LPG சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு விநியோக பயன்பாட்டிற்கு விநியோகத்தில் முன்னுரிமை வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

சிலிண்டர் கொடுத்தால் தினமும் இலவச பிரியாணி - உணவகத்தின் சலுகை | Hosur Hotel Offer Free Briyani For Lpg Cylinder

இதனால் வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காமல் பல உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சில உணவகங்கள் விறகுகளை பயன்படுத்தி சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒசூரில் இயங்கி வரும் ஈரோடு அம்மாயி மெஸ் என்ற உணவகம் ஒரு வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்திற்கு, தினமும் ஒருவேளை இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்ற சலுகையை வழங்கியுள்ளது.

சிலிண்டர் கொடுத்தால் தினமும் இலவச பிரியாணி - உணவகத்தின் சலுகை | Hosur Hotel Offer Free Briyani For Lpg Cylinder

இந்த சலுகை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதுவரை 6 பேர் சிலிண்டர்களை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *