இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி மற்றும் நாட்டின் முன்னணி விளையாட்டு ஊக்குவிப்பாளரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இம்முறை Commonwealth Games இல் இலங்கைக்குப் பெருமை தேடித்தந்த வீரர்களை விசேடமாகப் பாராட்டி கௌரவித்துள்ளது.
2026 ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெற்ற பொதுநலவாய போட்டிகளில் வீரர்களுக்கான வீதி உலாவின் போது, இவ்வீரர்கள் டயலொக் ஆசிஆட்டா தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர். 
இதன்போது, பொதுநலவாய போட்டிகளில் வரலாற்றில் Athletics பிரிவில் இலங்கைக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கம் வென்று தந்த ருமேஷ் தரங்க மற்றும் Para Games பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாலித பண்டார ஆகியோருக்கு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க அவர்கள் விசேட பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
2028 Los Angeles Olympic Games வரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் (NOCSL) உத்தியோகபூர்வ தொடர்புச் சேவைப் பங்காளராகச் செயற்படும் Dialog நிறுவனம், நாட்டின் முதன்மை Olympic எதிர்பார்ப்பான ருமேஷ் தரங்க போன்ற திறமையாளர்களை தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றது. அத்துடன், நாட்டின் Para Games விளையாட்டுகளின் பிரதான அனுசரணையாளராக, பாலித பண்டார உட்பட பல திறமைமிக்க வீரர்களை ஊக்கப்படுத்தவும் Dialog நிறுவனம் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.




