ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள நல்ல செய்தி

1 Min Read

ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளது.

பிரித்தானியாவில் ரயிலில் பயணிக்கும் பதின்மவயதினருக்கு பயனளிக்கும் வகையில் மாற்றம் ஒன்றைச் செய்துள்ளதாக பிரித்தானிய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கு பயனளிக்கும் விடயம்

பிரித்தானியாவில், ரயிலில் பயணிக்கும் 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்கள் ஏராளமானோர், 16-17 Saver Railcard என்னும் ரயில்வே பாஸ் ஒன்றைப் பயன்படுத்திவருகிறார்கள்.

ரயிலில் பயணிக்கும் இளைஞர்களுக்கு ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள நல்ல செய்தி | Uk Youths To Get Half Price Travel By Railcard

இந்த பாஸ், 16 முதல் 17 வயதுள்ள இளைஞர்களுக்காக பாதி விலையில் வழங்கப்பட்டுவருகிறது.

விடயம் என்னவென்றால், 17 வயதுடைய ஒரு இளைஞர் 18 வயதை எட்டிவிட்டால், அதற்குப் பிறகு இந்த ரயில்வே பாஸை பயன்படுத்தமுடியாது.ஆகவே, கல்வியாண்டின் பாதியிலேயே 18 வயதைத் தொடும் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர், தங்கள் சக மாணவ மாணவியரை விட அதிக செலவு செய்து பயணம் செய்யவேண்டியிருக்கும்.

இந்நிலையில், இனி இளைஞர்கள் 18 வயதை எட்டினாலும், அந்த ஆண்டு முடியும் வரை அந்த தள்ளுபடி விலை பாஸை பயன்படுத்தலாம் என பிரித்தானிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றத்தால், மேலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலன் அடைய உள்ளார்கள்.

இந்த மாற்றம், இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 17ஆம் திகதி அமுலுக்கு வர உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *