20 வருடங்களின் பின் இலங்கைக்கு தங்கம்; ருமேஷ் தரங்க வரலாறு படைத்தார்!

1 Min Read

2026 பொதுநலவாய போட்டியில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இந்த அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தத் தங்கம் பல வரலாற்றுப் பதிவுகளை உருவாக்கியுள்ளது:
✅ 20 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை வென்ற முதலாவது பொதுநலவாய போட்டி தங்கம்!
✅ 76 ஆண்டுகளுக்குப் பிறகு தடகளப் போட்டியில் கிடைத்த முதலாவது தங்கம்!
✅ இந்தியாவின் ஒலிம்பிக் சம்பியன் நீரஜ் சோப்ராவை முறியடித்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

உலக தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ருமேஷ், ஈட்டி எறிதலில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த முதலாவது பொதுநலவாய போட்டியிலான தங்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2006ஆம் ஆண்டு பளுதூக்கும் போட்டியில் சிந்தன விதானகே தங்கப் பதக்கம் வென்றிருந்தமையே இதற் முன்னரான பொதுநலவாய இலங்கைக்கான தங்கப் பதக்க சாதனையாக இருந்தது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *