மன்னர் சார்லசின் முடிவால் கண்ணீர் விட்டுக் கதறும் இளவரசி

2 Min Read

மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனிவியான சாராவும் மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்ததால் அவர்கள் ராஜகுடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனாலும், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது மக்கள் அனுதாபம் காட்டிவந்தார்கள்.

மக்கள் ஆதரவை இழந்த இளவரசிகள்

ஆண்ட்ரூ சாராவால் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பிரச்சினை என மக்கள் முதல் மன்னர் வரை இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது பரிதாபம் கொண்டிருந்த நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளிலிருந்து இளவரசிகள் இருவரும் கூட அந்த மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றது தெரியவந்தது.

மன்னர் சார்லசின் முடிவால் கண்ணீர் விட்டுக் கதறும் இளவரசி | Princess Beatrice Cries For Charles To Take Action

எனவே, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது மக்கள் வைத்திருந்த அனுதாபம், தற்போது கோபமாக மாறியுள்ளது.

அவர்களுடைய பெற்றோரான ஆண்ட்ரூ மற்றும் சாராவைப்போல, தங்கள் பெற்றோருக்கும் எப்ஸ்டீனுக்கும் உள்ள தொடர்பு குறித்து இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியையும் கேள்வி கேட்கவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.

கண்ணீர் விட்டுக் கதறும் இளவரசி

இதற்கிடையில், ஆண்ட்ரூ சாராவால் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் தடுப்பதற்காக, மன்னர் சார்லசின் மூத்த ஆலோசகர் ஒருவர் அவர்களுக்கு உதவ முன்வந்ததாகவும், ஆனால், அந்த உதவியை இளவரசிகள் நிராகரித்துவிட்டதாகவும் பிரபல பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்னர் சார்லசின் முடிவால் கண்ணீர் விட்டுக் கதறும் இளவரசி | Princess Beatrice Cries For Charles To Take Action

எனவே, மன்னருடைய ஆலோசகரின் உதவியை இளவரசிகள் நிராகரித்த விடயம் மன்னர் சார்லசை கோபப்படுத்தியுள்ளதாம்.

மேலும், இளவரசிகள் மீதான மக்களின் அனுதாபமும் கோபமாக மாறியுள்ளதால், இவ்வளவு நாட்களும் தன் தம்பியின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு ஆதரவாக செயல்பட்ட மன்னர் சார்லஸ், இப்போது வேறு வழியில்லாமல் அவர்களை விட்டு விலகும் நிலை உருவாகியுள்ளது.

ஆக, ராஜகுடும்பத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்காக மன்னர் சார்லஸ் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியை விட்டு விலக முடிவு செய்துள்ளதால், இளவரசி பீட்ரைஸ் கண்ணீர் விட்டுக் கதறிவருவதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.

இளவரசி யூஜீனியோ, நடப்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாமல், இதெல்லாம் சரியாகிவிடாதா என ஏங்கிக்கொண்டிருப்பதாகவும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த அந்த நபர் தெரிவிக்கிறார்.

மொத்தத்தில், மன்னரின் ஆதரவையும் மக்கள் ஆதரவையும் இழந்துள்ளதால், இனி இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு சிக்கல்தான் என்றே தோன்றுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *