ஈரானுக்கு படைகளை அனுப்ப ட்ரம்பின் கோரிக்கை… திட்டவட்டமாக மறுத்த பிரித்தானியா

2 Min Read

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்க போர் கப்பல்களை அனுப்ப முடியாது என பிரித்தானியா ட்ரம்பிடம் தெரிவித்துள்ளது.

ஈரான் எச்சரித்திருப்பதால்

ஞாயிறன்று இரவு தொலைபேசியில் உரையாடிய இரு தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர். ஹார்முஸ் நீரிணையை மூடுவதற்கான ஈரானின் முயற்சிகளைச் சமாளிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி உதவி கோரியிருந்த நிலையிலேயே இந்த உரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு படைகளை அனுப்ப ட்ரம்பின் கோரிக்கை... திட்டவட்டமாக மறுத்த பிரித்தானியா | Starmer Not Sending Warships

பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கையில், உலகளாவிய கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறை முடிவுக்குக் கொண்டுவர, அந்த நீரிணையை மீண்டும் திறப்பதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்; இந்த இடையூறு உலகம் முழுவதும் செலவுகளை அதிகரித்து வருகிறது.

எனினும், பிரித்தானியாவிற்கு எதிராகப் பதிலடி கொடுப்போம் என ஈரான் ஞாயிறன்று எச்சரித்திருப்பதால், சிக்கியுள்ள எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கப் பிரித்தானியாவின் போர்க்கப்பல்களை அனுப்புவதற்கான திட்டங்கள் எதுவும் தற்போது இல்லை என்றே அறிய வருகிறது.

மாறாக, அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாக, கண்ணிவெடிகளை அடையாளம் காணும் ட்ரோன்களையும் ஏவுகணைகளை முறியடிக்கும் அமைப்புகளையும் வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது.

இதனிடையே, முற்றிலும் சின்னா பின்னமாக்கப்பட்ட ஒரு நாட்டினால் அந்த நீரிணை இனிமேல் அச்சுறுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அப்பகுதிக்குக் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று தாம் விரும்புவதாக சனிக்கிழமையன்று ட்ரம்ப் கோரிக்கை வைத்திருந்தார்.

ஈரானுக்கு படைகளை அனுப்ப ட்ரம்பின் கோரிக்கை... திட்டவட்டமாக மறுத்த பிரித்தானியா | Starmer Not Sending Warships

அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை

இந்த நிலையில் தற்போது, பிரித்தானியா அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் பல்வேறு வாய்ப்புகளை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

உலகின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாக முன்னெடுக்கப்படுகிறது, மேலும் அதன் மூடல் எண்ணெய் விலைகளை பீப்பாய்க்கு சுமார் 100 டொலர் என உயர்த்தியுள்ளன.

ஈரானுக்கு படைகளை அனுப்ப ட்ரம்பின் கோரிக்கை... திட்டவட்டமாக மறுத்த பிரித்தானியா | Starmer Not Sending Warships

இருப்பினும், ஹார்முஸ் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்புவதில் அமைச்சர்களுக்கு உடன்பாடில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, உலகமெங்கும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத இப்போர் இன்னும் தீவிரமடையும் ஆபத்து குறித்தும், வளைகுடாப் பகுதியில் ஈரான் தனது தாக்குதல்களை உக்கிரமடையச் செய்யக்கூடும் என்ற அச்சம் குறித்தும் அமைச்சர்கள் கவலையடைந்துள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *