பாதி மைதானத்தில் இருந்து ஒரே கிக்! ஒட்டுமொத்த மைதானத்தையும் அதிர வைத்த கோல்

1 Min Read

எல்சே அணிக்கு எதிரான லா லிகா போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முதல் பாதியில் 2-0

எஸ்டாடியோ பெர்னாபியூ மைதானத்தில் நடந்த லா லிகா போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் எல்சே அணிகள் மோதின.

Real Madrid vs Elche

ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட்டின் அன்டோனியோ ருட்ரிகர் கோல் அடித்தார். அடுத்த 5 நிமிடங்களில் பெடெரிகோ வல்வேர்டே அபார கோல் அடித்தார்.

இதன்மூலம் முதல் பாதியில் ரியல் மாட்ரிட் அணி முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்னர் 66வது நிமிடத்தில் டேனியல் யானெஸ் கிக் செய்த பந்தை, டீன் ஹுய்ஜ்சென் (Dean Huijsen) தலையால் முட்டி வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார்.

Real Madrid vs Elche

மிரள வைத்த கோல்

அதனைத் தொடர்ந்து ரியல் மாட்ரிட்டின் மேனுவல் ஏஞ்சல் கோல் தடுக்கும் முயற்சியில் (85வது நிமிடம்), அவரது காலில் பட்டு பந்து வலைக்குள் சென்றது. இதனால் எல்சே அணிக்கு கோல் (OG) கிடைத்தது.

எனினும், அடுத்த 3 நிமிடங்களில் (89வது நிமிடம்) அர்டா குலர் (Arda Guler) பாதி மைதானத்தில் இருந்து கிக் செய்ய பந்து உயரே பறந்து கோல் வலையை நோக்கி சென்றது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத கோல் கீப்பர் திரும்புவதற்குள் அந்த பந்து வலைக்குள் சென்று கோலாக மாறியது.

ஒட்டுமொத்த மைதானமும் இந்த கோலினைப் பார்த்து வியந்து ஆர்ப்பரித்தனர். இறுதியில் ரியல் மாட்ரிட் அணி (Real Madrid) 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Arda Guler

Real Madrid vs Elche

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *