ஈரான் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு இந்தியாவிற்கு மாதக்கணக்கில் அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்கா, தற்போது ஈரானுடன் இரண்டு வாங்களாக போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியா உட்பட உலக நாடுகளை ரஷ்ய எண்ணையை வாங்குமாறு வேண்டுகிறது என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ஈரானுக்கு எதிரான சட்டவிரோத போரை ஆதரித்ததற்காக ஐரோப்பிய நாடுகளையும் அராக்சி கடுமையாக சாடியுள்ளார்.
இதன்மூலம் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முயற்சிப்பது பரிதாபகரமானது என கூறியுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்கா 30 நாள் அதளர்வு அறிவித்து, சில நாடுகள் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதி அளித்தத்தையடுத்து, அராக்சி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எண்ணெய் விலை உயர்வதால், ரஷ்யாவிற்கு பெரும் வருவாய் கிடைக்கிறது என Finanacial Times வெளியிட்ட தகவலையும் அராக்சி தனது பதிவில் இணைந்துள்ளார்.
இதனால் உலக அரசியல் மற்றும் எரிசக்தி சந்தையில் புதிய பதற்றம் உருவாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், தங்கள் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய எந்த பாதையைத் தெரிவு செய்கின்றன என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.




