ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்… ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம்

1 Min Read

சரக்கு வர்த்தகம் சீன யுவானில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் நெருக்கடி

இந்த சாத்தியமான நடவடிக்கை, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கான ஈரானின் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கூறப்படுகிறது.

ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் | Hormuz Ship Passage Yuan Pay

ஆனால் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்றே தெரிய வருகிறது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் தடைக்குள்ளான ரஷ்ய எண்ணெய் ரூபிள் அல்லது யுவானில் விலை நிர்ணயிக்கப்படுவதைத் தவிர, பெரும்பாலான உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் அமெரிக்க டொலர்களிலேயே நடைபெறுகிறது.

எண்ணெய் வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை விரிவுபடுத்தச் சீனா பல ஆண்டுகளாக முயன்று வருகிறது; இருப்பினும், டொலரே முதன்மையான இருப்பு நாணயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.

20 மில்லியன் பீப்பாய்

எரிபொருள் விநியோகத்திற்கான ஒரு முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்த கவலைகள், எண்ணெய் விலைகளை ஜூலை 2022-க்குப் பிந்தைய மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன.

ஹார்முஸ் நீரிணை ஊடாக நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் பீப்பாய் எண்ணெய், உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் கொண்டு செல்லப்படுகிறது.

ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் | Hormuz Ship Passage Yuan Pay

இந்த நிலையில், பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது போர் தொடுக்க, மார்ச் 1ஆம் திகதி முதல் ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் முடக்கியது.

தற்போது ஆயிரத்திற்கு மேற்பட்ட கப்பல்கள் அந்த நீரிணையைக் கடக்க காத்திருக்கும் நிலையில், ஈரான் இப்படியான ஒரு முடிவுக்கு வந்துள்ளது அடுத்த நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *