வெடிகுண்டுகளுடன் பாகிஸ்தானில் நுழைந்த ட்ரோன்கள்., ஈரான்-அமெரிக்கா போர் சூழலில் பதற்றம்

1 Min Read

ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் வெடிகுண்டுகள் ஏந்திய ட்ரோன்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள், வெடிகுண்டுகள் ஏந்திய 2 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஒன்று Faizabad interchange அருகிலும், மற்றோன்று I-9 sector பகுதியிலும் விழுந்ததாக Dawn பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரோன்கள் வெடிகுண்டுகள் ஏந்தியிருந்தது உறுதிப்படுத்தப்பட்டாலும், அவை எங்கிருந்து வந்தது, யார் அனுப்பியது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Explosive drones Pakistan, Iran US war escalation, Islamabad drone attack, Pakistan security alert, Faizabad drone crash, Kohat drone interception, West Asia tensions #Pakistan #IranUSConflict #DroneAttack #Islamabad #SecurityAlert #Geopolitics #WorldNews

இதற்கு முன்பு Khyber-Pakhtunkhwa-வில் உள்ள Kohat Garrison நகரத்திலும் மற்றோரு ட்ரோன் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமாபாத் விமான நிலையம் மூடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. ஆனால், பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரிகள், விமான சேவைகள் வழக்கம்போல இயங்குவதாக அறிவித்தனர்.

பாகிஸ்தானை குறிவைக்க ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை விடுத்த சிலநாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா மோதல் தீவிரமடைந்துள்ள சூழலில் நடந்ததால், பாதுகாப்பு சூழ்நிலைகள் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத் மற்றும் சுற்றுப்புறங்களில் பாதுகாப்பு படைகள் அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *