சீனாவில் இருந்து ஏவுகணை… நேட்டோ உறுப்பு நாடொன்று ஒப்புதல்

1 Min Read

செர்பியா சமீபத்தில் தனது விமானப்படைக்காக சீனாவின் CM-400AKG பாலிஸ்டிக் ஏவுகணைகளை வாங்கியது, இந்த ஆயுதத்தை பயன்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடாக மாறியது.

புகைப்படங்கள் கசிந்தது

குறித்த தகவலை செர்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிச் வியாழக்கிழமை வெளிப்படுத்தியுள்ளார். செர்பியா, நேட்டோவுடனான தனது நெருக்கத்தையும், ரஷ்யாவுடனான பல நூற்றாண்டுகள் பழமையான மத, இன மற்றும் அரசியல் கூட்டணியையும், சீனாவுடனான மூலோபாய உறவுகளையும் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் விருப்பத்தையும் சமநிலைப்படுத்த பாடுபடுகிறது.

சீனாவில் இருந்து ஏவுகணை... நேட்டோ உறுப்பு நாடொன்று ஒப்புதல் | Serbia Admits Chinese Missiles

செய்தி ஊடகம் ஒன்றில் நேரலையில் பேசிய ஜனாதிபதி வுசிச், எங்களிடம் அந்த ஏவுகணைகள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன; மேலும், அந்த எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த ஏவுகணை குறித்த புகைப்படங்கள் கசிந்த நிலையிலேயே ஜனாதிபதி வுசிச் இதை ஒப்புக்கொண்டுள்ளார். செர்பிய விமானப்படை, சோவியத் தயாரிப்பான தனது MiG-29 போர் விமானங்களை CM-400AKG-ஏவுகணைகளைப் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்துள்ளதாக வுசிச் தெரிவித்தார்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பு நாடும், செர்பியாவின் எதிரியுமான குரோஷியா இந்த ஏவுகணை விவகாரத்தை கடுமையாகவே விமர்சித்துள்ளது.

இந்தியா–பாகிஸ்தான்

ஏவுகணை கொள்முதலை, பிராந்திய நிலைத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாகவும், இராணுவச் சமநிலையை மாற்றியமைக்கும் ஒரு முயற்சியாகவும், பால்கன் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் ஆயுதப் போட்டியின் ஒரு அறிகுறியாகவும் கருதுவதாக குரோஷியா குறிப்பிட்டுள்ளது.

சீனாவில் இருந்து ஏவுகணை... நேட்டோ உறுப்பு நாடொன்று ஒப்புதல் | Serbia Admits Chinese Missiles

சீனாவின் CM-400AKG ஏவுகணையானது முதல் முதலில் 2025 இந்தியா–பாகிஸ்தான் மோதலின் போது, பாகிஸ்தானிய விமானப்படை ஒரு இந்திய S-400 வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்பட்டது.

செர்பியா அந்த ஏவுகணைகளுக்காகச் செலுத்திய தொகையை வெளியிட ஜனாதிபதி வுசிச் மறுத்துவிட்டார்; மாறாக, தங்களுக்கு சிறிய சலுகை கிடைத்ததாக மட்டுமே அவர் குறிப்பிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *