ஈரானில் போர் நடப்பதே தெரியாது… கோமாவில் மொஜ்தபா காமெனி: கசிந்துள்ள புதிய தகவல்

2 Min Read

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் குறித்தும், தாம் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர் தலைவர் என்பதை அறியாதவராகவும் மொஜ்தபா காமெனி கோமா நிலையில் உள்ளார் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது.

கோமா நிலையில்

பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக நடத்திய தாக்குதலில் அலி காமெனி கொல்லப்பட்டதை அடுத்து, 56 வயதான மொஜ்தபா காமெனி உயர் தலைவர் பொறுப்புக்கு தெரிவு செய்யப்பட்டார்.

ஈரானில் போர் நடப்பதே தெரியாது... கோமாவில் மொஜ்தபா காமெனி: கசிந்துள்ள புதிய தகவல் | Mojtaba Khamenei Unaware War

ஆனால் குறித்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ள மொஜ்தபா காமெனி தற்போது கோமா நிலையில் தெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றே தகவல் கசிந்துள்ளது.

தற்போதைய அவரது நிலை காரணமாக, மத்திய கிழக்கில் போர் நடப்பதும், அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளதும், உயர் தலைவராக தாம் தெரிவு செய்யப்பட்டுள்ளதும் உணர்ந்தவராக இல்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் , அதி தீவிர சிகிச்சையில் இருந்து வரும் மொஜ்தபா, பாதுகாப்பு அதிகாரிகளால் சூழப்பட்ட நிலையில் உள்ளார். சினா மருத்துவமனையின் பெரும்பகுதி பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது.

இருப்பினும், அலி காமெனி கொல்லப்பட்ட அன்று நடந்த தாக்குதலில் மொஜ்தபாவும் காயமடைந்தாரா என்பது தொடர்பில் தகவல் இல்லை. இதனிடையே, ஈரானில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என லண்டனில் காத்திருக்கும் ஒரு தலைவருக்கு பகிரப்பட்ட ஒரு தகவலில்,

ஈரானில் போர் நடப்பதே தெரியாது... கோமாவில் மொஜ்தபா காமெனி: கசிந்துள்ள புதிய தகவல் | Mojtaba Khamenei Unaware War

ஈரான் ஜனாதிபதியிடம்

மொஜ்தபாவின் கால்களில் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய கல்லீரல் அல்லது வயிறு மிக மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது கோமா நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நபர் அமெரிக்கா ஆதரவுடன் ஈரானில் ஆட்சியமைக்க பல வருடங்களாக காத்திருப்பவர். இரண்டு நாட்களுக்கு முன்னர் சினா மருத்துவமனைக்கு சென்ற ஈரான் ஜனாதிபதியிடம், மொஜ்தபா நிலைமை குறித்து விரிவாக விளக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.

ஈரானில் போர் நடப்பதே தெரியாது... கோமாவில் மொஜ்தபா காமெனி: கசிந்துள்ள புதிய தகவல் | Mojtaba Khamenei Unaware War

இந்த நிலையில், வியாழனன்று போர் குறித்து மொஜ்தபா தனது முதல் அறிக்கையை வெளியிட்டதிலிருந்து, அவர் இருக்கும் இடம் குறித்த கேள்விகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

அந்த அறிக்கையில், ஈரான் தனது தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவதிலிருந்து பின்வாங்காது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *