தனியாளாக பந்தை கடத்திச்சென்று கோல் அடித்த வீரர்! செல்ஸி அணியை பந்தாடிய PSG

1 Min Read

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 5-2 என்ற கோல் கணக்கில் செல்ஸி அணியை வீழ்த்தியது.

பார்கோலா கோல்

பாரிஸில் நடந்த UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் மற்றும் செல்ஸி அணிகள் மோதின.

PSG 5-2 Chelsea

ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் பிராட்லீ பார்கோலா (PSG) கோல் அடித்தார். அதற்கு பதில் கோலாக 28வது நிமிடத்தில் மாலோ கஸ்டோ (செல்ஸி) அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

பின்னர் ஓஸ்மானே டெம்பேலே (Ousmane Dembele) 40வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் பாதி ஆடுகளத்தில் இருந்து பந்தை தனியாளாக கடத்திச் சென்று கோல் அடித்து மிரட்டினார்.

அபார வெற்றி

இரண்டாம் பாதியில் செல்ஸியின் என்ஸோ பெர்னாண்டஸ் (57) கோல் அடிக்க 2-2 என ஆட்டம் சூடுபிடித்தது.

ஆனால், 74வது நிமிடத்தில் PSGயின் விதின்ஹா அடித்த கோல் செல்ஸி அணிக்கு பேரிடியாக அமைந்தது.

மேலும் Khvicha Kvaratskhelia 86 மற்றும் 90+4வது நிமிடங்களில் கோல்கள் அடிக்க, பாரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

PSG 5-2 Chelsea

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *