போருக்கு மத்தியில்… ஹார்முஸ் நீரிணை வழியாக தங்குத்தடையின்றி பாயும் ஈரான் எண்ணெய்

2 Min Read

ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகும் நிலையிலும், ஈரானின் கச்சா எண்ணெய் தங்குத்தடையின்றி ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிய ஏற்றுமதி

பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, சுமார் 13.7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் ஏற்றுமதி செய்துள்ளது.

போருக்கு மத்தியில்... ஹார்முஸ் நீரிணை வழியாக தங்குத்தடையின்றி பாயும் ஈரான் எண்ணெய் | Iranian Oil Flows Through Hormuz

இது அனைத்தும், மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தை கண்காணிக்கும் Kpler நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,

மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் ஈரானிய ஏற்றுமதி இன்னும் அதிகமாக சுமார் 16.5 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது என தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடி நடவடிக்கைகளில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும் அடங்கும்.

இதனால், மத்திய கிழக்கு எண்ணெய் ஏற்றுமதியின் பெரும்பகுதிக்கான பிரதான நுழைவாயில் வழியாக ஈரானியரல்லாத கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டது, மேலும் பிராந்தியத்தில் உள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆனால் தற்போது எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் எண்ணெய் ஏற்றுமதியைத் தொடரும் ஈரானின் திறன், வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் போது நடந்தவற்றுடன் முற்றிலும் மாறுபட்டது என்றே கூறுகின்றனர்.

போருக்கு மத்தியில்... ஹார்முஸ் நீரிணை வழியாக தங்குத்தடையின்றி பாயும் ஈரான் எண்ணெய் | Iranian Oil Flows Through Hormuz

இதில் லத்தீன் அமெரிக்க நாட்டின் கடற்படை முற்றுகை மற்றும் வெனிசுலா கடல் எல்லைக்குள் நுழைய அல்லது வெளியேற முயற்சிக்கும் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கச்சா எண்ணெய் அமெரிக்காவால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், ஹார்முஸ் நீரிணையும் போர்க்களமாக மாறியிருக்கும் என்றே கூறுகின்றனர்.

ஈரானின் கார்க் தீவு

மேலும், ஈரான் தனது கப்பல்களை இந்தப் பகுதி வழியாக அனுப்பும் வரை, ஹார்முஸ் நீரிணை குறைந்தபட்சம் ஓரளவாவது திறந்து வைத்திருக்க ஈரான் அனுமதிக்கிறது என்றே குறிப்பிடுகின்றனர்.

ஹார்முஸ் விவகாரத்திலும் அமெரிக்கா தலையிட்டிருந்தால், ஈரான் உக்கிரமான நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரையில் நாளுக்கு சராசரியாக 1.1 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஈரானால் ஹார்முஸ் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.

போருக்கு மத்தியில்... ஹார்முஸ் நீரிணை வழியாக தங்குத்தடையின்றி பாயும் ஈரான் எண்ணெய் | Iranian Oil Flows Through Hormuz

இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சேவையில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கப்பல்கள் ஈரானின் கார்க் தீவின் ஏற்றுமதி மையத்தில் இன்னும் எண்ணெயை ஏற்றிக் கொண்டிருப்பதாகவே தகவல் கசிந்துள்ளது.

போருக்கு முன்னர் நாளுக்கு 2.17 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16 ஆம் திகதி வாரத்தில் ஈரானில் இருந்து சாதனை அளவாக 3.79 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டது. பிப்ரவரி 28 முதல் ஆறு கச்சா எண்ணெய் கப்பல்கள் ஈரானில் இருந்து வெளியேறியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *