ஹார்மோஸ் நீரிணையை இந்த நாடுகளுக்கு மட்டும் திறப்போம் – ஒரேயொரு நிபந்தனை விதித்த ஈரான்

1 Min Read

ஹார்மோஸ் நீரிணை வழியாக கப்பல்களை அனுமதிக்க ஈரானின் IRGC நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.

ஹார்மோஸ் நீரிணையை மூடியுள்ள ஈரான்

ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் போர் காரணமாக, மத்திய கிழக்கு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன.

ஹார்மோஸ் நீரிணையை இந்த நாடுகளுக்கு மட்டும் திறப்போம் - ஒரேயொரு நிபந்தனை விதித்த ஈரான் | Irgc Demand To Open Strait Of Harmuz For Countries

உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் ஹார்மோஸ் நீரிணையை(strait of hormuz) ஈரான் மூடியுள்ளது.

எந்த கப்பலாவது இந்த பாதை வழியே செல்ல முயன்றால், தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் IRGC தளபதி எச்சரித்திருந்தார். எச்சரிக்கையை மீறி சென்ற கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எரிபொருள் சிக்கலை எதிர்கொண்டுள்ள. கச்சா எண்ணெய் பாரிய விலையேற்றம் அடைந்து வருகிறது. LPG தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது.

சில நாடுகள் எரிபொருளை சேமிக்க பள்ளி கல்லூரிகளை இணைய வழியில் நடத்தவும், ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரியவும் அறிவுறுத்தியுள்ளது.

ஹார்மோஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டால், எரிபொருள் தட்டுப்பாடு பல நாடுகளை கொரோனா பேரிடரின் போது ஏற்பட்ட ஊரடங்கு போன்ற நிலைக்கு கொண்டு செல்லும்.

IRGC நிபந்தனை

ஹார்மோஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என டிரம்ப் கூறியிருந்தாலும்., தற்போது வரை எந்த கப்பலும் செல்லவில்லை.

ஹார்மோஸ் நீரிணையை இந்த நாடுகளுக்கு மட்டும் திறப்போம் - ஒரேயொரு நிபந்தனை விதித்த ஈரான் | Irgc Demand To Open Strait Of Harmuz For Countries

இந்நிலையில், எந்த நாடு தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தூதர்களை வெளியேற்றுகிறதோ அந்த நாடுகளின் கப்பல்களை ஹார்மோஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கிறோம் என IRGC அறிவித்துள்ளது.

எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுத்தால், கடும் தாக்குதலை ஈரான் எதிர்கொள்ளும் என டிரம்ப் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை IRGC வெளியிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *