விவாகரத்து பெற்ற ஹன்சிகா மோத்வானி – ஜீவனாம்சம் கேட்க மறுப்பு

1 Min Read

வரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

ஹன்சிகா விவாகரத்து

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஹன்சிகா மோத்வானி(34), சிறு வயதிலே ஷக்கலக்கா பூம் பூம் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சினிமா பயணத்தை தொடங்கினார்.

விவாகரத்து பெற்ற ஹன்சிகா மோத்வானி - ஜீவனாம்சம் கேட்க மறுப்பு | Actress Hansika Ended Marriage Life With Divorce

மாப்பிளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அதன் பிறகு தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் தனது நீண்டகால காதலரும், தொழிலதிபருமான சோஹைல் கதுரியா என்பவரை ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் திருமணம் செய்தார்.

விவாகரத்து பெற்ற ஹன்சிகா மோத்வானி - ஜீவனாம்சம் கேட்க மறுப்பு | Actress Hansika Ended Marriage Life With Divorce

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து விவாகரத்து கோரி 2025 ஆம் ஆண்டில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை பாந்த்ரா நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஹன்சிகா மோத்வானி, தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *