அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள்: பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்காளதேச வீரர் ராணா

1 Min Read

வங்காளதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ராணாவின் பந்துவீச்சில்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது.

Pakistan Cricket Team

நாணய சுழற்சியில் வென்ற வங்காளதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது.

சாஹிப்ஸதா ஃபர்ஹான் 38 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நாஹித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்த வந்த ஷமில் ஹுசைன் 4 ஓட்டங்களில் ராணாவின் பந்துவீச்சிலேயே அவுட் ஆக, மாஸ் சதாஹத் 18 ஓட்டங்களில் வெளியேறினார்.

Pakistan Cricket Team

ரிஸ்வான் சொதப்பல்

அதன் பின்னர் உலகக்கிண்ணத்தில் விளையாடாத மொஹம்மது ரிஸ்வான் களமிறங்கினார். ஆனால் அவர் 10 மட்டுமே எடுத்த நிலையில் ராணாவில் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து பாகிஸ்தான் மீள்வதற்குள்ளேயே,சல்மான் அஹாவின் (5) விக்கெட்டையும் நாஹித் ராணா (Nahid Rana) கைப்பற்றினார்.

இதனால் 69 ஓட்டங்கள் எடுப்பதற்குள் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

Bangladesh Cricket Team

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *