எண்ணெய் வயல், விமான தளத்தை குறிவைத்த ஏவுகணைகள்- வீழ்த்திய சவுதி அரேபியா

1 Min Read

சவுதி அரேபியா 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) அதிகாலை தெரிவித்துள்ளது.

அதில் 6 ஏவுகணைகள் Prince Sultan விமான தளத்தை குறிவைத்து வந்ததாகவும் மற்றொன்று கிழக்கு மாகாணத்தை நோக்கி சென்றபோது தடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், Shaybah எண்ணெய் வயலை நோக்கி வந்த 5 ட்ரோன்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளை நோக்கி வந்த 11 டட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள், அமேரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக தொடங்கிய போரின் தாக்கமாகும்.

Saudi Arabia Iran missiles, Prince Sultan Air Base attack, Saudi defense ministry news, Middle East oil crisis 2026, US Israel Iran war updates #SaudiArabia #IranMissiles #MiddleEastConflict #OilCrisis #GlobalSecurity #PrinceSultanAirBase #USIranWar

சவுதி அமைச்சரவை, ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ளது. “இவை பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளன” என்று எச்சரித்துள்ளது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், “சவுதி அரேபியா தனது பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நிலப்பரப்பை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களின் பின்னணியில், உலக எண்ணெய் சந்தையில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. Brent Crude எண்ணெய் விலை திங்கட்கிழமையன்று, வரலாற்றில் முதல்முறையாக பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்தது. பின்னர் செவ்வாய்கிழமை 90 டொலராக குறைந்தது.

Aramco நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அதிகாரி Amin Nasser, ” இந்த இடையூறு நீண்டகாலம் நீடித்தால் உலக பொருளாதாரத்திற்கு பேரழிவு விளைவிக்கும்” என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க வெள்ளை மாளிகை, போரின் இலக்குகள் நிறைவேற்றப்பட்டதும் எரிபொருள் விலை குறையும் என தெரிவித்துள்ளது.

ஆனால், ஈரான் புரட்சிகர காவல்படை, போர் எப்போது முடிவும் என்பதை நாங்கள் தான் தீர்மானிப்போம் என்று சவால் விடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *