மருத்துவ மாணவி எடுத்த மோசமான முடிவு: கடிதத்தில் எழுதிவைத்துள்ள திடுக்கிடவைக்கும் செய்தி

1 Min Read

இந்தியாவின் மும்பையில், தன் காதலனால் மனோரீதியாக துன்புறுத்தப்பட்டதால் பல் மருத்துவம் பயின்றுவந்த இளம்பெண் ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.

மருத்துவ மாணவி எடுத்த மோசமான முடிவு

மும்பையைச் சேர்ந்த ஸ்துதி சோன்வானே (24) என்னும் இளம்பெண், பல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பயின்றுவந்துள்ளார்.

மருத்துவ மாணவி எடுத்த மோசமான முடிவு: கடிதத்தில் எழுதிவைத்துள்ள திடுக்கிடவைக்கும் செய்தி | 24 Yr Old Girl Dies Herself With Chilling Note

செவாய்க்கிழமை காலை 11.00 மணி ஆகியும் ஸ்துதி தன் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மகளைக் கூப்பிட்டும் அவர் பதிலளிக்காததால் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் வந்து கதவை உடைத்து அறைக்குள் நுழைய, அங்கே ஸ்துதியின் உயிரற்ற உடலைத்தான் அவரது பெற்றோரால் பார்க்கமுடிந்துள்ளது.

ஸ்துதியின் அறையில் ஆறு பக்க கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தன் காதலர் தன்னை நம்பாமல் தன் நடத்தை குறித்து மோசமாக விமர்சித்தது முதலான பல்வேறு விடயங்களை அவர் எழுதிவைத்துள்ளார்.

கடிதத்தில் எழுதிவைத்திருந்த திடுக்கிடவைக்கும் விடயம்

அந்த கடிதத்தில் ஸ்துதி எழுதிவைத்துள்ள மற்றொரு விடயம் திடுக்கிடவைப்பதாக அமைந்துள்ளது. டெல்லியில், ஷ்ரத்தா வால்க்கர் என்னும் இளம்பெண்ணைக் கொலை செய்தார் அவரது காதலனான ஆஃப்தாப் பூனாவாலா என்பவர்.

மருத்துவ மாணவி எடுத்த மோசமான முடிவு: கடிதத்தில் எழுதிவைத்துள்ள திடுக்கிடவைக்கும் செய்தி | 24 Yr Old Girl Dies Herself With Chilling Note

ஆஃப்தாபின் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் ஆஃப்தாபின் வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜுக்குள் வைக்கப்பட்டிருந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில், ஸ்துதி எழுதிவைத்துள்ள கடிதத்தில், தனக்கும் தன் காதலனுக்கும் பிரச்சினை இருப்பதை நன்கறிந்த தனது தோழிகள், ஷ்ரத்தாவைப் போலவே ஒரு நாள் உன் உடலும் ஃப்ரிட்ஜுக்குள் கண்டெடுக்கப்படும் பார் என அவரிடம் வேடிக்கையாக கூறுவதுண்டு என்றும் எழுதிவைத்துள்ளார் ஸ்துதி.

பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *