முன்னர் எண்ணெய்க்காக குறிவைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகள்: இப்போது?

1 Min Read

மத்திய கிழக்கு நாடுகள் நீண்ட காலமாக, போர் உருவாகும்போதெல்லாம் தங்களுடைய ஒரு சொத்தைக் குறித்து அஞ்சி வந்தன. அது, எண்ணெய்!

ஆம், போரின்போது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்கள் தாக்கப்பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் எப்போதும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இருந்துவந்துள்ளது.

ஆனால், இம்முறை புதியதொரு அச்சம் உருவாகியுள்ளது!

மத்திய கிழக்கு நாடுகளின் புதிய அச்சம்

ஆம், ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து, சம்பந்தமேயில்லாமல் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்திவருகிறது ஈரான்.

முன்னர் எண்ணெய்க்காக குறிவைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகள்: இப்போது? | Middle East Fears Attack On Water Desalination

இந்நிலையில், சொத்துக்களை விட முக்கியமான, தங்கள் வாழ்வாதாரமான தண்ணீர் குறிவைக்கப்படலாம் என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உருவாகியுள்ளதாம்.

விடயம் என்னவென்றால், மத்திய கிழக்கில் ஆறுகளோ, நதிகளோ இல்லாததால், மழை நீரும் போதுமான அளவில் கிடைக்காததால், பெரும்பாலான நகரங்கள் தண்ணீருக்காக, கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையங்களையே நம்பி உள்ளன.

ஆகவே, தினந்தோறும், 24 மணிநேரமும் இந்த கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு மையங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

இப்போதைய போர்களில் ஏவுகணைகளும் ட்ரோன்களும் பயன்படுத்தப்படும் நிலையில், கடற்கரையோரமாக, எளிதில் கண்ணுக்கு புலப்படும் வகையில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எளிதில் தாக்குதலுக்குள்ளாக வாய்ப்புள்ளது.

முன்னர் எண்ணெய்க்காக குறிவைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகள்: இப்போது? | Middle East Fears Attack On Water Desalination

அப்படி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகுமானால், அது மக்களுடைய வாழ்வாதாரத்தையே பாதிக்கும்!

ஆக, அப்படி அப்படி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்குள்ளாகுமானால், அதன் விளைவு போரைவிட பெரியதாக இருக்கும் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *