இன்னும் கொல்கத்தாவில் சிக்கித் தவிக்கிறார்கள்: இது சரியல்ல – இங்கிலாந்து முன்னாள் வீரர் வாகன்

1 Min Read

டி20 உலகக்கிண்ணம் முடிந்தும் மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகள் கொல்கத்தாவில் சிக்கித் தவிப்பதாக இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

விமான போக்குவரத்து தடை

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவுவதால் விமான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

West Indies Cricket Team

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்தியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பின்னர் இங்கிலாந்து அணி தனி விமானத்திலும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஒரே விமானத்திலும் தாயகம் திரும்ப உள்ளதாக கூறப்பட்டது.

மைக்கேல் வாகன் காட்டம்

இந்த நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவரான மைக்கேல் வாகன் (Michael Vaughan) தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் இந்தியாவிலேயே இருப்பதாக கூறி பதிவிட்டுள்ளார்.

Michael Vaughan

அவரது பதிவில், “மார்ச் 1ஆம் திகதி உலகக்கிண்ணத்தில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வெளியேற்றப்பட்டது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இப்போது மார்ச் 9ஆம் திகதி..அவர்கள் இன்னும் கொல்கத்தாவில் சிக்கித் தவிக்கிறார்கள்..தென் ஆப்பிரிக்கா அதே நிலையில் உள்ளது..!!!! இது சரியல்ல…

இங்கிலாந்து அணி நாக்-அவுட் ஆன 36 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது..எல்லா அணிகளுக்கும் இது நடக்க வேண்டும்..” என தெரிவித்துள்ளார்.

Michael Vaughan

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *