இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ – ஐசிசியை விட பலமடங்கு அதிகம்

1 Min Read

20 உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2026 T20 உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை வென்றது.

இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவித்த பிசிசிஐ - ஐசிசியை விட பலமடங்கு அதிகம் | Bcci Announced Rs 131Cr Cash Reward For Team India

இதன் மூலம், தொடர்ச்சியாக 2 முறை T20 உலக கிண்ணத்தை வென்ற ஒரே அணி, 3 முறை T20 உலக கிண்ணம் வென்ற ஒரே அணி, சொந்த மண்ணில் கிண்ணத்தை வென்ற ஒரே அணி உள்ளிட்ட சாதனைகளை இந்திய அணி படைத்தது.

T20 உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு இந்திய பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத்தொகையாக ரூ.21.5 கோடி கிடைத்தது.

இந்நிலையில், கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI), ரூ.131 கோடி பரிசுத்தொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி அணியில் இடம்பெற்ற 15 வீரர்களும் தலா ரூ.6 கோடி பெறுவார்கள். மீதமுள்ள ரூ. 41 கோடி பயிற்சியாளர்கள் மற்றும் பிற துணை ஊழியர்கள் இடையே பகிர்ந்தளிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டில் T20 உலக கிண்ணம் வென்ற போது, 125 கோடி வழங்கப்பட்டது. இதில், ஒவ்வொரு வீரருக்கும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *