ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை

1 Min Read

தென் ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டனை இலங்கை கிரிக்கெட் வாரியம் புதிய பயிற்சியாளராக நியமித்துள்ளது.

அதிர்ச்சிகர தோல்வி

டி20 உலகக்கிண்ணத்தில் அதிர்ச்சிகர தோல்வியால் இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து, தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya) விலகினார்.

Sanath Jayasuriya

அதன் பின்னர் 2011யில் ஐசிசி உலகக்கிண்ணத்தை வெல்ல இந்திய அணியை வழிநடத்திய கேரி கிர்ஸ்டனை, தேசிய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Gary Kirsten

பயிற்சியாளராக கிர்ஸ்டன்

இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் ஏப்ரல் 14, 2028 வரை கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Babar Azam/Gary Kirsten

முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரான கேரி கிர்ஸ்டனின் பதவிக் காலத்தில், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தது.

Pathum Nissanka

மிக சமீபத்தில் கிர்ஸ்டன் டி20 உலகக்கிண்ணத்தின்போது நமீபியாவின் ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gary Kirsten

Gary Kirsten

Gary Kirsten

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *