ஈரானிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய வான் பாதுகாப்பு படை

1 Min Read

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வான் பாதுகாப்பு படையின் திறனை உலகிற்கு காட்டியுள்ளது.

அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட 40 வினாடிகள் கொண்ட காணொளியில், ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக சுட்டு வீழ்த்திய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதிகாரபூர்வ தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் 17 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டது. அதில் 16 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்று கடலில் விழுந்தது.

அதேபோல், 117 ட்ரோன்களில் 113 சுட்டு வீழ்த்தப்பட்டன, 4 நாட்டிற்குள் விழுந்தன.

 

UAE air defence, Iranian drones UAE, Middle East conflict news, Iran Israel US war update, UAE missile interception, Indian embassy UAE advisory #UAE #Iran #Israel #MiddleEastConflict #DroneAttack #AirDefence #BreakingNews #IndiaInUAE

மொத்தத்தில் ஈரான் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 238 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 221 அழிக்கப்பட்டன.

மேலும், 1,422 ட்ரோன்களில் 1,342 பாதுகாப்பு படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டன. 80 ட்ரோன்கள் நாட்டின் உள்ளே விழுந்தன.

இந்த தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 112 பேர் சிறிய மற்றும் நடுத்தர காயங்களுடன் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடங்களில் அனுமதி இல்லாமல் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க கூடாது என அமீரக அதிகரைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய தூதரகம், அமீரகத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *