பிரித்தானியாவில் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்த ரசிகர்கள்..மன்னிப்பு கேட்கும் கட்டாயத்திற்கு ஆளான ஊடகம்

1 Min Read

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை குறிப்பிட்டு, ஈரானிய எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டதற்கு ITV ஊடகம் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

விமர்சனங்களைப் பெற்ற கெய்ர் ஸ்டார்மர்

ஈரானின் ட்ரோன் தாக்குதல்களுக்கு இடையில், அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கியதற்காக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போன்றவர்களிடம் இருந்து விமர்சனங்களைப் பெற்றார்.

Iran supporters in london streets

இந்த நிலையில், இங்கிலாந்தில் வார இறுதியில் நடந்த UK Open of darts போட்டியில், டார்ட்ஸ் ரசிகர்கள் தொடர்ந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை குறிவைத்தனர்.

மைன்ஹெட்டில் நடந்த இப்போட்டியில் கெய்ர் ஸ்டார்மருக்கு எதிராக சில கோஷங்களை எழுப்பினர்.

இதன் காரணமாக, ITV ஊடகம் தலையிட்டு பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

Iran supporters in london streets

நீங்கள் ஏன் உதவவில்லை?

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானிய எதிர்ப்பாளர்கள் லண்டனின் மையப்பகுதியில் ட்ரம்பிற்காக கோஷமிட்டு, அணிவகுத்துச் சென்று ஸ்டார்மரை குறிவைத்தனர்.

அப்போது போர் முயற்சியில் சேர மறுத்ததற்காக சர் கெய்ர் ஸ்டார்மர் ஒரு கோழை என்று, பெயர் குறிப்பிட விரும்பாத எதிர்ப்பாளர் முத்திரை குத்தினார்.

மேலும் அவர், “நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன், ஈரான் மக்கள் சுதந்திரம் அடைய நீங்கள் ஏன் உதவவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.

Keir Starmer

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *