இந்தியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி.., எது தெரியுமா?

1 Min Read

இந்தியாவில் பெண் கல்வியின் வரலாறு சமூக சீர்திருத்தம் மற்றும் பாலின பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்துடன் இணைந்துள்ளது.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கு கல்வி கற்பிப்பது சமூகத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

ஆனால் சில சமூக சீர்திருத்தவாதிகள் அந்த தடைகளை உடைத்து பெண்கள் கல்விக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

அந்தவகையில், இந்தியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி எப்போது திறக்கப்பட்டது என்று குறித்து பாரக்கலாம்.

இந்தியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி.., எது தெரியுமா? | Which Is The India S First Open School For Girls

1783ஆம் ஆண்டு சென்னையில் வெறும் 10 மாணவிகளுடன் பிரசிடென்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது.

1849ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பெத்தூன் பள்ளி தொடங்கப்பட்டது. இது காலனித்துவ நிர்வாகத்தின் கீழ் நிறுவப்பட்ட மிக பழமையான பெண்கள் பள்ளியாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் பள்ளி 1848 ஜனவரி 1 அன்று புனேவில் உள்ள பிடே வாடாவில் தொடங்கப்பட்டது.

இதை சமூக சீர்திருத்தவாதிகள் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே நிறுவினர்.

இந்தியாவில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளி.., எது தெரியுமா? | Which Is The India S First Open School For Girls

இந்த பள்ளி அனைத்து சாதி மற்றும் சமூகங்களை சேர்ந்த பெண்களுக்கும் கல்வி வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் சாவித்ரிபாய் பூலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக அறியப்பட்டார்.

இதனால் புனேவில் தொடங்கப்பட்ட அந்த பள்ளி இந்தியாவில் பெண் கல்வி வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *