ஈரானுடன் சண்டை போட துடிக்கும் குர்திஷ் படைகள்: ஈரானின் வரைபடத்தில் மாற்றம் நிச்சயம்: டிரம்ப் கருத்து

1 Min Read

போரின் இறுதியில் ஈரானின் வரைபடம் முந்தி இருந்தது போல் இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரானின் வரைபடத்தில் மாற்றம்

ஈரானுக்கு எதிரான தீவிரமான மோதலில் அமெரிக்க படைகளும், இஸ்ரேலிய படைகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சனிக்கிழமை டிரம்ப் வெளியிட்ட தகவலில், இந்த மோதலின் முடிவில் ஈரானின் புவிசார் அரசியல் எல்லையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் சண்டை போட துடிக்கும் குர்திஷ் படைகள்: ஈரானின் வரைபடத்தில் மாற்றம் நிச்சயம்: டிரம்ப் கருத்து | End Of War Map Of Iran Will Redrawn Trump Says

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்தில், இந்த போர் முடியும் போது ஈரானின் எல்லை வரைபடம் முந்தி இருந்தது போல் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஒரு வார காலத்தில்  ஈரானில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பல அசாத்திய வெற்றிகளை பெற்று இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஈரான் தலைமை கட்டிடம் திறம்பட அழிக்கப்பட்டு இருப்பதையும், ஈரானிய ஆயுதப்படையின் பெரும் பகுதி நிர்மூலமாக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஈரானுடன் சண்டை போட துடிக்கும் குர்திஷ் படைகள்: ஈரானின் வரைபடத்தில் மாற்றம் நிச்சயம்: டிரம்ப் கருத்து | End Of War Map Of Iran Will Redrawn Trump Says

அத்துடன் கடந்த 7 நாட்களில் அமெரிக்காவின் தாக்குதல் வேகம் மற்றும் தாக்குதலின் தாக்கம் என்பது நினைத்து பார்த்திராத அளவுக்கு இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குர்திஷ் படைகள் நிலை

ஈரானுக்கு எதிராக குர்திஷ் மக்கள் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதை அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப் அது குறித்த தனது நிலைப்பாட்டையும் விளக்கியுள்ளார்.

அதில் குர்திஷ் படைகளை நேரடியாக போர்க்களத்திற்கு கொண்டு வருவதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *