ரொனால்டோ இல்லை..கடைசி கட்டத்தில் ஒற்றை கோல்: அல் நஸரை காப்பாற்றிய வீரர்

1 Min Read

சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல் நஸர் அணி 1-0 என்ற கணக்கில் நியோம் அணியை வீழ்த்தியது.

ரொனால்டோ காயம்

ரியாத்தில் அல்-அவ்வல் பார்க் மைதானத்தில் நடந்த சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் நஸர் மற்றும் நியோம் அணிகள் மோதின.

Cristiano Ronaldo

தொடை எலும்பு காயம் காரணமாக கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) இப்போட்டியில் விளையாடவில்லை.

இதனால் சாடியோ மானே (Sadio Mane) பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஆடி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஆனாலும் அல் நஸர் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் கோல் விழாத நிலை இரண்டாம் பாதியிலும் நீடித்தது.

Mohamed Simakan

சிமகன் அபாரம்

எப்படியும் போட்டி டிராவில் முடிந்துவிடும் என்று அனைவரும் நினைத்த சூழலில், அல் நஸர் வீரர் மொஹம்மது சிமகன் (Mohamed Simakan) தமது அணி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

90+5வது நிமிடத்தில் ஜோவா பெலிக்ஸ் ப்ரீகிக்கில் உதைத்த பந்தை, சிமகன் வேகமாக செயல்பட்டு தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

Mohamed Simakan/Al-NassrFC

நியோம் அணியால் இதற்கு பதில் கோல் அடிக்க முடியாததால், அல் நஸர் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அல்-நஸர் அணி 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

Mohamed Simakan

Mohamed Simakan/Al-NassrFC

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *