நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய 15 வது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு மனைவிக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
இரட்டை கொண்டாட்டம்
தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டாரான அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேகா ரெட்டி மார்ச் 6ம் திகதி தங்களது 15 வது திருமண நாளை கொண்டாடினர்.
அதே நாளில், அல்லு அர்ஜூனின் தம்பி அல்லு சிரிஷ்-நயனிகா ரெட்டி திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
1.5 கோடி ரூபாய் கார் பரிசு
நடிகர் அல்லு அர்ஜூன் தன்னுடைய 15 வது திருமண ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக மனைவி சினேகா ரெட்டிக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்இ 53(Mercedes AMG CLE 53) ரக காரை பரிசாக வழங்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகி வரும் நிலையில் அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கருப்பு நிற மெர்சிடிஸ் சொகுசு காரின் சாவியை நடிகர் அல்லு அர்ஜுன் வழங்க மனைவி சினேகா ரெட்டி அதை மகிழ்ச்சியுடனும் இன்ப அதிர்ச்சியுடனும் பெற்றுக் கொள்கிறார்.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். இது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அத்துடன் இந்த வீடியோ 15 ஆண்டுகால அன்பு மற்றும் ஒற்றுமையின் கொண்டாட்டம் என்று வாசகத்துடன் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் திருமண நாளில், மனைவிக்கு வாழ்த்து ஒன்றையும் சமூக வலைதள பக்கத்தில் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ளார்.
அதில், நீ இல்லாமல் இந்த 15 ஆண்டுகள் கடந்து இருக்காது, திருமண நாள் வாழ்த்துக்கள் குட்டி என்று பதிவிட்டுள்ளது.




