வானிலும் பறக்கும்; நீரிலும் நீந்தும் – இந்தியாவின் முதல் வான், நீர் அவதார் ட்ரோன்

2 Min Read

வானிலும் பறக்கும், நீரிலும் நீந்தும் இந்தியாவின் முதல் வான் – நீர் ட்ரோன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அவதார் ட்ரோன்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவை தளமாக கொண்ட AquaAirX Autonomous Systems என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், நாட்டின் முதல் ஆம்பிபியஸ் ட்ரோனை 5 மார்ச் 2026 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான ட்ரோன்களை போல் இது வானில் பறப்பதோடு மட்டுமல்லாமல் , நீருக்கடியில் நீந்தவும் செய்யும்.

வானிலும் பறக்கும்; நீரிலும் நீந்தும் - இந்தியாவின் முதல் வான், நீர் அவதார் ட்ரோன் | India Avataar Drone Can Fly In Sky Swim In Sea

இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி தொழில்நுட்பத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

சமீபத்தில், Zerodha வின் முதலீட்டு கிளையான Rainmatter மூலம் ரூ.12.5 கோடி முதலீட்டை பெற்றுள்ளது.

இந்த ட்ரோன் தொழில்நுட்ப தயார்நிலை நிலை 6 ஐ எட்டியுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயர் நம்பக சோதனைகளுக்குத் தயாராக உள்ள இந்த ட்ரோன், முழு அளவிலான உற்பத்தியை விரைவில் மேற்கொள்ள உள்ளது.

அவதார் (AVATAAR) என பெயரிடப்பட்டுள்ள இந்த ட்ரோன், கடல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வலுவான 3 அடுக்கு பாதுகாப்பு பொறிமுறையை உள்ளடக்கியதாக AquaAirX நிறுவனர் டி.எஸ். கௌதமி தெரிவித்துள்ளார்.

எப்படி செயல்படும்?

இந்த ட்ரோன் உப்பு நீர் அரிப்பை எதிர்க்கும் கார்பன் ஃபைபர் அமைப்பைக் கொண்டுள்ளது, உப்பு மற்றும் பிற பொருட்களால் இதன் சென்சார்களைப் பாதிக்காமல் தடுக்க சிறப்பு பூச்சுகள் இந்த ட்ரோன் மீது பூசப்பட்டுள்ளது.

இதன் ஆயுளை நீட்டிப்பதற்காக ஒவ்வொரு முறை பறப்பின் போதும், நன்னீரால் கழுவப்படுகிறது.

இந்த அவதார் அடுத்த தலைமுறை தன்னாட்சி தந்திரோபாய வான்வழி மற்றும் நீர்வாழ் உளவு வாகனமாக செயல்படுகிறது.

இது வானில் பறந்து கொண்டு கப்பலை கண்காணிக்கும் அதே வேளையில், நீருக்கடியில் சென்று கப்பலின் அடிப்பகுதியையும் ஆய்வு செய்ய முடியும்.

இருண்ட ஆழ்கடல் நீரில் பெரும்பாலும் தெரிவுநிலை குறைவாக இருப்பதால், இந்த அவதார் ஒலியை அனுப்பி, அவை பொருள்களில் பட்டு திரும்பி வரும் எதிராளிகளை வைத்து கடலடியை 3D வரைபடத்தை உருவாக்கும்.

பேட்டரி குறைவாக இருந்தால், இந்த ட்ரோன் ஒருபோதும் நீருக்குள் செல்லாத வகையில், அதன் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இந்தத் தொழில்நுட்பம் கடல்சார் மற்றும் கடலோர கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கடற்படை உளவு, கடல்சார் உள்கட்டமைப்பு ஆய்வுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி, பேரிடர் மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கியமான துறைகளில் சாத்தியமான பயன்பாடுகளை வழங்குகிறது.

கடலுக்கு அடியில் உள்ள எரிசக்தி குழாய்கள் (Pipelines) மற்றும் கேபிள்களை சோதனை செய்ய முடியும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *