இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பற்றிய அதிகாரபூர்வ தரவுகளை இனி வெளியிடமாட்டோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய அரசு செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “எண்ணெய் ஏற்றுமதி அளவுகள் குறித்து எவ்வித தகவல்களையும் வழங்க மாட்டோம். எங்கள் வர்த்தகத்தை பாதிக்க விரும்பும் பலர் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
2022-க்கு முன் ரஷ்யாவின் பெரும்பாலான எண்ணெய் ஏற்றுமதி ஐரோப்பாவிற்கு சென்றது.
ஆனால், உக்ரைன் போருக்கு பிறகு மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளால், ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியை ஆசியாவிற்கு திருப்பியது. அதில், இந்தியா விரைவில் முக்கிய வாடிக்கையாளராக மாறியது.

இந்தியாவின் IOC, Reliance, Nayara Energy போன்ற நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கி, உள்நாட்டு தேவைகளையும் ஏற்றுமதியையும் பூர்த்தி செய்தன.
அமெரிக்கா சமீபத்தில் 30 நாட்களுக்கு தற்காலிக அனுமதி வழங்கி, இந்தியா ரஷ்யா எண்ணெயை வாங்கலாம் என அறிவித்தது. இதனால் உலகளாவிய விநியோகத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.
ரஷியன் இந்த முடிவு உலக எண்ணெய் வரத்தகத்தில் வெளிப்படைத்தன்மை குறைவதை காட்டுகிறது. இனி அதிகாரப்பூரவ புள்ளிவிவரங்கள் இல்லாமல், கப்பல் கண்காணிப்பு தரவுகள் மற்றும் துறைமுக பதிவுகள் மூலமாகவே எண்ணெய் ஏற்றுமதி அளவுகள் கணிக்கப்படும்.




