திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்; குழந்தைகளுக்கு மோதிரம் – பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்

1 Min Read

தவெக சார்பில் சென்னை மாமல்லபுறத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில், பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்களுக்கு தவெக தலைவர் விஜய் புத்தகம் மற்றும் கைக்கடிகாரம் வழங்கி கௌரவித்தார்.

பெண்களுக்கான தவெக தேர்தல் வாக்குறுதி

இதனை தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்; குழந்தைகளுக்கு மோதிரம் - பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய் | Vijay Announce Tvk Election Manifesto For Womens

பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அது என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். இது என்னுடைய முதல் தேர்தல் வாக்குறுதி ஆகும்.

மாநில, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு தவிர, 60 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.

அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் மூலம் ஆண்டுகளுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.

திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கமும், ஒரு தரமான பட்டு புடவையும் அண்ணன் சீராக வழங்கப்படும்.

வெற்றிப் பயணம் திட்டத்தில், அரசு போக்குவரத்தின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.  சாதாரண உடையில் இருக்கும் அந்தப் பெண்கள் படை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலையம்மாள் அதி விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

ரேசன் கடைகள், பள்ளி, கல்லூரிகளில் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின் வழங்கப்படும்.

தனியார் ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் ஸ்மார்ட் பேனிக் பட்டன்கள் அமைக்கப்படும்.

காமராஜர் கல்வி உறுதித் திட்டம் மூலம் 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய் (அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் குழந்தை வரவேற்புப் பெட்டகத்துடன் (Baby Welcome Kit) வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *