இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: இலங்கைத் தூதரகம் விடுத்த அறிவிப்பு

1 Min Read

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் ஹில்புல்லாவின் தாக்குதல் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியாகியுள்ளது.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா இது குறித்து வழங்கிய தகவலில், ஹைஃபா, நஹாரியா, அர்கோ, கலிலேயா, அஃபுலா, கார்மல் மலைகள், நாசரேத் மற்றும் திபேரியாஸ் உள்ளிட்ட வடக்குப் பகுதியில் வசிக்கும் இலங்கை மக்கள் லெபனானில் இருந்து வரக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் உள்ளூர் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: இலங்கைத் தூதரகம் விடுத்த அறிவிப்பு | Sl Embassy Warns Sri Lanka Citizens

இஸ்ரேலின் வடக்கு பகுதியில் கிட்டத்தட்ட 9000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதால் அரசாங்க ஊடகங்கள் மற்றும் இலங்கை தூதரகம் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு ஏற்பட்டால், இஸ்ரேலின் அவசர சேவைகள் பெறுவீர்கள் என்றும், 101 என்ற எண்ணை தொடர்பு கொண்டு இந்த அவசர சேவைகளை பெறலாம் என்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தேவையான வழிமுறைகளுக்கு, வாரத்தில் 7 நாட்களும் தூதரகத்தின் வாட்ஸ்அப் எண்ணை 00972-559305731 அழைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *