தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி

1 Min Read

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அந்நாட்டின் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.

அதனால் பதற்றம் உருவானதுடன், அந்த நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்களும், சுற்றுலாப்பயணிகளும் அச்சத்துக்குள்ளானார்கள்.

தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்புக்கேட்ட ஈரான் ஜனாதிபதி | Iran President Pezeshkian Apologise For Neighbours

எப்படியாவது தங்கள் சொந்த நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற நிலை அவர்களுக்கு உருவானது.

இந்நிலையில், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று அரசு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய ஈரான் ஜனாதிபதியான Masoud Pezeshkian, போரின்போது தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம், என் சார்பிலும், ஈரான் சார்பிலும், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன், இனி எந்த நாடாகிலும் ஈரானை தாக்கினாலொழிய, அந்த நாடுகளைத் தாக்குவதில்லை என்றும், அண்டை நாடுகள் மீது ஏவுகணைகள் வீசப்படாது என ஈரானின் இடைக்காலத் தலைமைத்துவப் பேரவை முடிவு செய்துள்ளது என்றும் ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *