ஈரானின் அலி காமெனி கொல்லப்பட்டது இப்படித்தான்: இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம்

1 Min Read

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஈரானை குறிவைத்த அமெரிக்கா, இஸ்ரேல்

ஈரானின் அணுசக்தி திட்டங்களை எதிர்த்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த 6 நாட்களாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அமெரிக்கா Operation Epic Fury என்ற பெயரிலும், இஸ்ரேல் Operation Roaring Lion என்ற பெயரிலும் ஈரான் மீது இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

ஈரானின் அலி காமெனி கொல்லப்பட்டது இப்படித்தான்: இஸ்ரேல் வெளியிட்ட வீடியோ ஆதாரம் | How Khamenei Was Killed Israel Released Video

இதன் முதல் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டதை அடுத்து ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இராணுவ இருப்புகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

வீடியோ வெளியிட்ட இஸ்ரேல்

இந்நிலையில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட தாக்குதல் காட்சிகள் தொடர்பான வீடியோவை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

குண்டுகள் வீசப்பட்ட போது அலி காமெனி எங்கு இருந்தார் என்பது தொடர்பான துல்லியமான உளவுத் தகவல்களை மொசாட் மற்றும் CIA வழங்கியதாக தெரிவித்துள்ளது.

இந்த உளவு தகவலின் அடிப்படையில் ஈரானிய தலைமை வளாகத்தின் அடியில் உள்ள மறைவிடத்தில் அலி காமெனி மறைந்து இருந்தது உறுதி செய்யப்பட்டது,

இதிலிருந்து வீசப்பட்ட குண்டுகள் அலி காமெனி பதுங்கி இருந்த கட்டிடத்தை தரைமட்டமாக ஆக்கியதாக கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *