ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்க அமெரிக்கா பரிசீலனை

1 Min Read

ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்க பரிசீலனை

உலக அளவிலான எரிசக்தி நெருக்கடியை குறைக்கும் நோக்கில், அமெரிக்க நிதித்துறை கொள்கை மாற்றம் ஒன்றை மேற்கொள்ள ஆலோசித்து வருகிறது.

ஈரான் உடனான போரை தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் தட்டுப்பாட்டை சமாளிக்க ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீதான தடைகளை தளர்த்தக்கூடும் என்று அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்க அமெரிக்கா பரிசீலனை | Us Planing To Lifting Russian Oil Sanctions

அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ரஷ்ய எண்ணெய் மீதுள்ள பொருளாதார தடைகள் காரணமாக கடலில் கோடிக்கணக்கான பேரல் எண்ணெய்கள் கடலில் தேங்கியுள்ளன.

ரஷ்யா மீதான இந்த தடைகளை தளர்த்துவதன் மூலம் உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும் என்று அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி கொள்ள இந்தியாவுக்கு 30 நாள் தற்காலிக அவகாசம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை(Strait of Hormuz) அதிரடியாக மூடியது.

ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்க அமெரிக்கா பரிசீலனை | Us Planing To Lifting Russian Oil Sanctions

இந்த நீர்வழிப் பாதை உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் 20% பங்களிப்பை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பாதை வழியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடன் தொடர்புடைய எந்தவொரு கப்பல் வந்தாலும் அவை குறிவைக்கப்பட்டு தீ வைக்கப்படும் என்று ஈரானிய புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *