சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்: உக்ரைனின் முயற்சியை முறியடித்த ரஷ்யா

1 Min Read

ரஷ்யாவிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்

ரஷ்ய பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற கிட்டத்தட்ட 124 ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பரந்த நிலப்பரப்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக அளவில் செயலில் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட 124 ட்ரோன்கள்: உக்ரைனின் முயற்சியை முறியடித்த ரஷ்யா | Russia Shoot Down 124 Ukraine Drones

எல்லை பிராந்தியங்களான பிரையன்ஸ்க், ஓரியோல் மற்றும் பெல்கோரோட் ஆகிய இடங்களில் பல உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 3 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இவற்றில் மாஸ்கோ நகரை குறிவைத்து ஒரு ட்ரோன் பறந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் எத்தகைய சேதங்களும், யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *