சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை – 2 தென்இந்திய மாநிலங்கள் அதிரடி

1 Min Read

சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்க உள்ளதாக 2 தென் இந்திய மாநிலங்கள் அறிவித்துள்ளன.

சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

சிறுவர்கள் சமூக ஊடகங்களை அதிகளவில் பயன்படுவதன் காரணமாக பல்வேறு மன மற்றும் உடல் நலன் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - 2 தென்இந்திய மாநிலங்கள் அதிரடி | Karnataka Andhra To Ban Social Media For Childrens

இதனை கருத்தில் கொண்டு, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட உலக நாடுகள் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.

இந்தியாவிலும் இந்த தடையை அமுல்படுத்தவேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், டெல்லி AI உச்சி மாநாட்டில் வாலியுறுத்தினார். அது குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

2 தென்இந்திய மாநிலங்கள்

இந்நிலையில், இரு தென் இந்திய மாநிலங்கள் சிறுவர்களுக்கு சமூகவலைத்தளங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளன.

கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - 2 தென்இந்திய மாநிலங்கள் அதிரடி | Karnataka Andhra To Ban Social Media For Childrens

சிறுவர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதை தடுத்து, அவர்களின் மனநலனை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவிலே முதல் மாநிலமாக கர்நாடகா இந்த முடிவை அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஆந்திராவிலும் சமூகவலைத்தள பயன்பாட்டிற்கு தடை விதிப்பதாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை - 2 தென்இந்திய மாநிலங்கள் அதிரடி | Karnataka Andhra To Ban Social Media For Childrens

கர்நாடகாவின் 2026-27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்ற த்தில் தாக்கல் செய்த அவர், 90 நாட்களுக்குள் 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.

13 முதல் 16 வயதுக்குட்ப்பட்டவர்கள் சமூக ஊடகங்களைத் தடை செய்வது குறித்து அரசு ஒரு முடிவை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *