விடுமுறை என கூறி ஈரானை ஏமாற்றிய இஸ்ரேல்: மொசாட் கையாண்ட உளவு தந்திரம்

2 Min Read

இஸ்ரேலின் துல்லியமான திட்டமிடல் மற்றும் மிகவும் அதிநவீன தொழில்நுட்ப உளவு தகவல்களுடன் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டது தொடர்பான புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானை ஏமாற்றிய இஸ்ரேல்

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் இருப்பிடத்தின் மீது துல்லிய தாக்குதல் நடத்த இஸ்ரேலிய ராணுவம் அதிநவீன உளவியல் தந்திரத்தை பயன்படுத்தியுள்ளது.

அதாவது டெல் அவிவில் அமைந்துள்ள இஸ்ரேலிய ராணுவ தலைமையகத்தை ஈரான் உளவுத்துறை உன்னிப்பாக கவனிக்கும் என்பதை அறிந்த இஸ்ரேலிய ராணுவம், தாக்குதல் நடத்தப்பட்ட வாரத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் விடுமுறையில் இருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைத்துள்ளனர்.

விடுமுறை என கூறி ஈரானை ஏமாற்றிய இஸ்ரேல்: மொசாட் கையாண்ட உளவு தந்திரம் | Israel Spy Operation Against Iran Supreme Leader

அதாவது புனித நாளான ஷப்பாத்(Shabbat) விருந்திற்காக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் அனைவரும் வீட்டிற்கு செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

மேலும் உயர் அதிகாரிகளும் ராணுவ அலுவலகங்களை விட்டு வெளியேறுவதை ஈரான் உளவாளிகள் பார்த்துள்ளனர், ஆனால் மாறுவேடத்தில் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பிய அதிகாரிகள் ஈரான் மீதான தாக்குதல் கட்டளை மையத்தை முழு வீச்சில் செயல்படுத்தியுள்ளனர்.

அதிநவீன ஏவுகணை

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் இருப்பிடத்தின் மீது துல்லிய தாக்குதல் நடத்த “ப்ளூ ஸ்பாரோ” என்ற அதிநவீன ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது.

இந்த “ப்ளூ ஸ்பாரோ”(Blue Sparrow) ஏவுகணை விண்வெளி நோக்கி சீறிப்பாய்ந்து பின் அதி வேகமாக இலக்கை தாக்கும் திறன் கொண்டது எனவே இந்த ஏவுகணைகளை ரேடார்களால் கண்டறிய முடியவில்லை. இதற்காக காலை 7.30 மணிக்கு விண்ணில் பாய்ந்த இஸ்ரேலிய போர் விமானங்கள் காலை 9.40 மணியளவில் சுமார் 30 “ப்ளூ ஸ்பாரோ” ஏவுகணைகளை செலுத்தி ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் இருப்பிடத்தை துல்லியமாக தாக்கி அழித்துள்ளன.

விடுமுறை என கூறி ஈரானை ஏமாற்றிய இஸ்ரேல்: மொசாட் கையாண்ட உளவு தந்திரம் | Israel Spy Operation Against Iran Supreme Leader

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இந்த தாக்குதலுக்காக ஈரானிய ராணுவம் அந்நாட்டு மக்களை கண்காணிப்பதற்காக பயன்படுத்திய சிசிடிவிகளையும் மொசாட் உளவுத்துறை கைப்பற்றி உளவு பார்த்துள்ளது.

மேலும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காமெனி பாதுகாவலர்களின் இருப்பிடத்தை துல்லியமாக கணித்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *