ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு! அமெரிக்கா அவகாசம்

1 Min Read

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாள் தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய அளவிலான தடை ஏற்பட்டு இருப்பதால் அமெரிக்கா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி கொள்ள இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு! அமெரிக்கா அவகாசம் | America Grants 30 Days Waiver To Buy Russian Oil

இந்த தற்காலிக விலக்கு குறித்து வியாழக்கிழமை அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் வெளியிட்ட தகவலில், இது குறுகிய கால மற்றும் இடைக்கால ஏற்பாடு மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விலக்கு, கடலில் தேங்கி நிற்கும் எண்ணெய்களுக்கு மட்டும் தான் என்பதால் இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஆதாயத்திற்கு உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 30 நாள் அவகாசத்திற்கு பிறகு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா அமெரிக்காவை சார்ந்தே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் தற்காலிக விலக்கு! அமெரிக்கா அவகாசம் | America Grants 30 Days Waiver To Buy Russian Oil

இந்தியாவுக்கு கடும் அழுத்தம்

உக்ரைன் ரஷ்யா போரை சுட்டிக் காட்டி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடுமையான அழுத்தங்களை தெரிவித்து வந்தது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக அமெரிக்கா தற்போது தன்னுடைய முன்னுரிமைகளை மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *